தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை செலுத்திக்கொண்டார்.
ஒரு மருத்துவர் என்கிற முறையில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி குறித்த நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இம்மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. நேற்று வரை வரை 42,947 பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது .
மேலும் படிக்க... சசிகலாவிற்கு கடுமையான நுரையீரல் தொற்று: மருத்துவ அறிக்கை வெளியீடு
இரு தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர், மருத்துவர் மகேந்திரன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மருத்துவராக முன்கள பணியாளராக தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். கொரோனா வைரஸை விரட்டுவதில் தானும் பங்கெடுத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டுள்ளார். இவர் தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் 908 ஆவது நபர். சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது.