முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடுமையான சர்க்கரை வியாதி இருந்தபொழுது சசிகலா குடும்பத்தினர் அல்வா கொடுத்து அவரை கொன்று விட்டனர் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடுமையான சர்க்கரை வியாதி இருந்தபொழுது சசிகலா குடும்பத்தினர் அல்வா கொடுத்து அவரை கொன்று விட்டனர்.
கிராமத்தில் சாதாரண கிராமத்தில் கூட படிக்காதவர்கள் விஷம் கொடுத்து கொள்வதைவிட வெல்லம் கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள் அதே போலத்தான் ஜெயலலிதாவிற்கும் நடைபெற்றுள்ளது.
மேலும், அதற்குக் காரணமானவர்கள் தற்பொழுது பெங்களூர் சிறையிலும் திகார் சிறைக்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் விரைவில் நிரந்தரமாக சிறைச்சாலைக்கு செல்வார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஜெயலலிதாவின் வீடு, ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ் சென்ற சாலைகள் மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு காரணமானவர்கள் யார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை திரைப்படத்தில் இழிவுபடுத்திய ஏ. ஆர் முருகதாஸ் குடும்பத்தினர் இலவச சலுகைகளைப் பெற்று உள்ளனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்றும் தனது பேச்சில் சி.வி சண்முகம் குறிப்பிட்டார்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa Dead, Sasikala