புல்லட் பைக்கை ஓட்டிக் கொண்டு வாக்காளர்கள் வீட்டிற்கே சென்று, காலில் விழுந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பென்ஜமின்.
அப்போது, அமைச்சருக்கு ஆள் உயர மாலை அணிவித்தும், வீரவாள் வழங்கியும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர், மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டும், வாக்காளர்கள் வீட்டில் தேனீர் அருந்தியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமணிந்த ஒருவர் களமிறங்கி பிரச்சாரம் செய்தார்.
2021 சட்டமன்ற தேர்தல் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர் பென்ஜமின், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, மதுரவாயல் தொகுதியின் 148 வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் செல்வதை தவிர்த்து, தொண்டர்களோடு அமைச்சரும் புல்லட்டில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று பெண்களின் கால்களில் விழுந்தும் சால்வை அணிவித்தும் பிரச்சாரம் செய்தார்.
அவரை வரவேற்ற மாணவரணி அமைப்பாளர் சதீஸ் தலைமையில், பென்ஜமினுக்கு ஆள் உயர மாலை அணிவித்து வீரவாள் கையில் பரிசாக கொடுக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி பள்ளி மாணவர்கள், இளைஞர்களுடன் அமைச்சர் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் வேடமணிந்த நபர்
அத்துடன், வாக்களர்கள் வீடூகளில் தேனீர் அருந்தியும் வாக்கு கேட்டு பிச்சாரம் செய்தார். அவருடன், எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவரும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்பகுதியில் இருந்த கோவிலுக்குச் சென்ற அமைச்சர் பென்ஜமின் சாமி தரிசனம் செய்தார்.
Must Read : வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் எனக்கு 3 கூடை மாம்பழம் தர வேண்டும் - கலகலப்பாக ராமதாஸ் பிரச்சாரம்
ஆங்காங்கே அமைச்சர் பென்ஜமினுக்கு பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.