சாலையோர கடையில் சாம்பார் இட்லி: பிரச்சாரத்தை தொடங்கிய பென்ஜமின்

சாலையோர கடையில் சாம்பார் இட்லி: பிரச்சாரத்தை தொடங்கிய பென்ஜமின்

பென்ஜமின்

அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் மாலை, சால்வை அணிவித்தும் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

 • Share this:
  சாலையோர தள்ளுவண்டி கடையில் காலை உணவு, சாம்பார் இட்லி சாப்பிட்டு வாக்கு சேகரிப்பை  துவங்கிய அமைச்சர் பென்ஜமின்.

  மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் பெஞ்சமின் வளசரவாக்கம், ராமாபுரம், கைகங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து வளசரவாக்கம், கைகாங்குப்பம், ராமபுரம் பகுதியில் தேர்தல் பணிமனையை  அமைச்சர் பெஞ்சமின் திறந்து வைத்தார்.

  பிரச்சாரத்திற்கு  முன்னதாக காலை உணவாக சாலையோர தள்ளு வண்டி கடையில் எல்லோரும் சமம் என்று உணர்த்தும் வகையில் தொண்டர்களுடன் சேர்ந்து சாம்பார் இட்லி சாப்பி்ட்டார். இச்செயல் பொதுமக்கள், தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

  பின்னர் அங்கிருந்த மக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் மாலை, சால்வை அணிவித்தும் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அதேபோல் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர்.

  Must Read : ‘கட்சியில் இருந்து என்னை நீக்கும் வேலையை செய்து வருகிறார் அமைச்சர் வீரமணி’ - கண்கலங்கிய அமைச்சர் நிலோஃபர் கபில்

   

  பின்னர் அங்கிருந்த ஒவ்வொரு நல சங்க நிர்வாகிகளை சந்தித்த அமைச்சர் பென்ஜமின், அதிமுக அரசு செய்த நலத் திட்டங்களை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
  Published by:Suresh V
  First published: