• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரபல காமெடி நடிகர்களுடன் பிரச்சாரம் செய்யும் அமைச்சர் பென்ஜமின்

பிரபல காமெடி நடிகர்களுடன் பிரச்சாரம் செய்யும் அமைச்சர் பென்ஜமின்

நகைச்சுவை நடிகர்களுடன் பென்ஜமின்

நகைச்சுவை நடிகர்களுடன் பென்ஜமின்

பிரச்சாரத்தில் ஈடுபட்ட நகைச்சுவை நடிகர்களுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்...

  • Share this:
    பிரபல நகைச்சுவை நடிகர்களான கிங்காங் மற்றும் போண்டா மணி ஆகியோர் அமைச்சர் பென்ஜமினுக்கு ஆதரவாக மதுரவாயல் தொகுதியில்  இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் சுயோட்சை வேட்பாளர்கள் தங்கள்  தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    கமல்ஹாசன், குஷ்பு, மயில்சாமி, மன்சூர் அலிகான் சினேகன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் என  நட்சத்திர வேட்பாளர்களும்  இம்முறை தேர்தலில் களம் காண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அத்துடன் சில நடிகர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

    அதன்படி மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும்  ஊரக தொழில் அமைச்சர் பென்ஜமினுக்கு ஆதரவாக பிரபல திரைப்பட காமெடி நடிகர்களான கிங்காங், போண்டா மணி இருவரும்  மதுரவாயல் தொகுதியில், பகுதி செயலாளர் தேவதாஸ் ஏற்பாட்டில் 146 வார்டு பகுதியில் அமைச்சருக்கு ஆதரவாக  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

    மேலும் தாய்மார்கள், கல்லூரி மாணவ மாணவியர், மளிகை கடை வியபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களை சந்திந்து அதிமுக அரசின்  சாதனைகளை எடுத்து கூறியும் வாக்கு சேகரித்தனர். அதிமுகவினரும் தெரு தெருவாக கையில் கொடியுடன் பேரணியாக நடந்து சென்று இரட்டை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    Must Read : அமைச்சர் கார் அருகே பட்டாசு வெடித்த விவகாரம்: அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

     

    நடிகர்கள் வாக்கு கேட்பதை கண்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் செல் போன்களில் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: