• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அண்ணாமலை யார்? நீங்க சொல்லித்தான் அவர் யாருனே தெரியும்: அமைச்சர் நாசர் கிண்டல்

அண்ணாமலை யார்? நீங்க சொல்லித்தான் அவர் யாருனே தெரியும்: அமைச்சர் நாசர் கிண்டல்

அண்ணாமலை, ஆவடி நாசர்

அண்ணாமலை, ஆவடி நாசர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறும் தெரியாது. கொள்கை கோட்பாடு அடிப்படையில் இயக்கத்திற்கு வரவில்லை,  திமுக நீண்ட வரலாறு கொண்டது என கூறினார்.

  • Share this:
    சார்பட்டா திரைப்படம் குறித்த ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு அமைச்சர் நாசர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரோட்டோர அமைச்சர் அவருக்கு வரலாறு பற்றி என்ன தெரியும் என காட்டமாக பேசியுள்ளார். அதே போல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யார் என பத்ரிகையாளர்கள் சொல்லித்தான் தெரியும் என கூறினார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத் துறை அமைச்சரும் நாசர் இன்று வழங்கினார்.

    தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. அந்த வகையில் ஆவடி சுற்றுவட்டார பகுதியில் பட்டா வேண்டி பலர் மனு அளித்து இருந்தனர்.

    Also Read:    மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு

    ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 200 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பருத்திப்பட்டு பகுதியில் 350 பயனாளிகளுக்கு 318 கோடி மதிப்பிலான நிலங்களுக்கு பட்டாக்களை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

    இதனை பெற்றுக்கொண்ட மக்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஆவடி தனி வட்டாட்சியர் வில்சன் மற்றும் செல்வம் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Also Read:   டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் அதிமுக பற்றி திரித்து கூறப்பட்டதாக விமர்சித்து இருந்தார், இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியபோது அவர் ரோட்டோர மந்திரி என கடுமையாக விமர்சித்தார்.

    அண்ணாமலை, ஜெயக்குமார், ஆவடி நாசர்


    தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறும் தெரியாது. கொள்கை கோட்பாடு அடிப்படையில் இயக்கத்திற்கு வரவில்லை,  திமுக நீண்ட வரலாறு கொண்டது திமுகவினர் வாலாறு தெரிந்தவர்கள் என கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் தமிழகத்தில் 3 முதல்வர்கள் என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், அண்ணாமலை யார் என கிண்டலடித்த அமைச்சர் பத்திரிகையாளர்கள் கூறிதான் அவர் யார் என தெரிகிறது. அவருக்கு திமுக பற்றி அதன் வரலாறு பற்றி ஏதும் தெரியாது அவர்கள் அப்படிதான் கூறுவார் என பதிலளித்தார்.

    செய்தியாளர் கண்ணியப்பன், ஆவடி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: