மூன்று ரூபாய் விலை குறைப்புக்கு பிறகு கூடுதலாக 1.5 லட்சம் பொதுமக்கள் ஆவின்பால் வாங்குகின்றனர் - அமைச்சர் நாசர்

ஆவடி நாசர்

மூன்று ரூபாய் விலை குறைப்புக்கு பிறகு கூடுதலாக 1.5 லட்சம் பொதுமக்கள் ஆவின் பால் வாங்கி பயன் அடைகின்றனர். இதன் மூலம் தற்பொழுது 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஆவின் பால் விற்பனை குறித்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 2.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1.50 கோடி லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள பால் மதிப்பு கூட்டப்பட்ட 150 வகை பால் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில் குறிப்பாக ஆவின் நிறுவனத்திற்கு மற்றும் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் பெறப்பட்டு அதில் 26 லட்சம் லிட்டர் பால் தற்போது பொதுமக்கள் பயனடையும் வகையில் தினசரி விற்பனை செய்யப்படுகிறது.  மீதமுள்ள 10 லட்சம் லிட்டர் பாலை  நெய், தயிர், மோர், பால்பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் என சுமார் 150க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஆவின் பால் விலையை மூன்று ரூபாய் குறைத்தது. இதனால் தினசரி 85 லட்சம் ரூபாய் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 270 கோடி ரூபாய்க்கு மேல்  இழப்பு ஏற்படுவதாக பால் வளத்துறை  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு இழப்பு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம். ஆவின்பால் தமிழ்நாட்டிலேயே முடங்கிவிட்டது. தாயின் பாலுக்கு சமமான ஆவின்பால் எந்த வித கெமிக்கல் கலப்படமும் இல்லாமல் உள்ளது.
மற்ற நாடுகளுக்கும் மற்ற மாநிலங்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட விநியோகம் செய்யும் திட்டத்தை தற்போது வைத்திருப்பதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் பெருமளவு நஷ்டத்தை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் நாசர்.

தற்பொழுது பொது மக்கள் பெரும்பாலானோர் ஆவின்பால் வாங்குவதற்கு முன் வந்தாலும் அதன் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. எனவே இதை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் அனைத்து இடங்களிலும் ஆவின் பால் கிடைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல தனியார் பால் விலை உயர்ந்தால் அது ஆவின் நிறுவனத்திற்கு நன்மையே. அதன் மூலம் மேலும் ஆவின்பால் வாங்குவதற்கு பொதுமக்கள் முன் வருவார்கள் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று ரூபாய் விலை குறைப்புக்கு பிறகு கூடுதலாக 1.5 லட்சம் பொதுமக்கள் ஆவின்பால் வாங்கி பயன் அடைகின்றனர்.
இதன் மூலம் தற்பொழுது 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published: