நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோவில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு அமைச்சர் வருகை தந்தபோது, தனது செருப்பின் பெல்ட்டை கழற்ற அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்தார்.
அந்த சிறுவனும், செருப்பின் பெல்டை கழற்றிவிட, பின்னர் சீனிவாசனின் உதவியாளர் செருப்பை முழுவதுமாக கழற்றிவிட்டார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#EXCLUSIVE | சிறுவனைக் கூப்பிட்டு காலணியை கழற்றச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். முதுமலையில் நடந்த நிகழ்ச்சியில் சர்ச்சை.https://t.co/U6HmNlhE9u pic.twitter.com/ufgosojLA5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 6, 2020
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nilgiris