Home /News /tamil-nadu /

கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்

9, 10, 11, 12, ஆகிய வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகளும் அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகளும் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள கனியாமூர் சக்தி பள்ளியில் கடந்த வாரம் மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளியில் பயின்று வரும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் நலன் கருதி வரும் புதன்கிழமை முதல் அனைத்து மாணவர்களுக்கும் அதே பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்.

    மேலும் 9, 10, 11, 12, ஆகிய வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு அந்தப் பள்ளியைச் சுற்றி உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பேருந்து வசதி, இட வசதி போன்றவற்றை செய்து தருவதாக விருப்பம் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

    மேலும், “நாளை நிர்வாக தரப்பு மற்றும் அந்தப் பள்ளியில் பயின்று வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு, அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்த பள்ளியிலேயே படிப்பை தொடர்வதாக இருந்தாலும், வேறு ஏதேனும் மாற்றுப் பள்ளிகளுக்கு செல்ல விரும்பினாலும், அந்த மாணவர்களுக்குரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” எனவும் அமைச்சர் கூறினார்.

    தொடர்ந்து “மாணவிகளுக்கு பள்ளியில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை யாரிடமும் சொல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு ஆலோசனை ஏற்பாடுகள் செய்யப்பட்டும். ’மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டிகள் வகுப்பறையில் வைக்கப்பட்டு தங்கள் புகார்களை அதில் தெரிவிக்கலாம். அதிலும் தெரிவிக்க முடியாத மாணவச் செல்வங்களுக்கு என தனி வெப்சைட் விரைவில் துவங்கப்படும். அந்த வெப்சைட்டில் தங்களால் சொல்ல முடியாத சம்பவங்களையும் பள்ளியில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளையும் பதிவு செய்யலாம்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    செய்தியாளர்: எஸ் .செந்தில்குமார் -கள்ளக்குறிச்சி
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Kallakurichi

    அடுத்த செய்தி