மீனவர்கள் வங்கி சேவைகளை எளிமையாக பெற, விவசாய கூட்டுறவு வங்கிகள் செயல்படுவதை போல், மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில், மீனவர்கள் வங்கி சேவைகளை எளிமையாக பெற, விவசாய கூட்டுறவு வங்கிகள் செயல்படுவதை போல், மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க முதலமைச்சர் உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மீனவர்கள் வங்கி சேவைகளை எளிதில் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.
மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து விசைப் படகுகளுக்கும் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடலில் மீன்வளம் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், கடல் மீன் வளத்தைப் பாதுகாத்து பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடற்பாசி வளர்த்தல் மற்றும் கூண்டுகளில் கடல் மீன் வளர்ப்பு போன்றவற்றில் மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பணிகளில் சேர்ந்த 367 வட மாநிலத்தவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு
தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மீன் பதனிடுதல் மற்றும் ஏற்றுமதிக்கு தேவையான கட்டமைப்புகளை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பாக் வளைகுடா பகுதியில் மீனவர்களை பாதுகாக்க மீன்பிடி தொழில் செய்ய ஏதுவாக கட்சத்தீவை மீட்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.