12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவிகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து தனி குழு அமைத்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முதலில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாழி ஆய்வு செய்தார். 8 தளங்கள் கொண்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ஒவ்வொரு தளமாக சென்று, நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகள் தொடங்கி கழிவறை வரை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், ‘அ.தி.மு.க ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிப்பு செய்யப்படவில்லை. நூலகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் வழிகிறது. அதைக்கூட சரிசெய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

    அண்ணா நூலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி படங்களை எடுப்பதை தவிர 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் ஏதும் செய்யவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா அன்று இருந்ததுபோல் மீண்டும் புத்துயிர் பெறும். வரும் 10 ஆம் தேதி நடைபெறும் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது? கொரோனா காலத்தில் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தனி குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: