Home /News /tamil-nadu /

பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பள்ளிக்கூடங்களில் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

  திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 469 குடும்பங்களுக்கு இலவச கேஸ் அடுப்பு, அரிசி உள்ளிட்டவற்றை அமைச்சர் கே என் நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். அப்போது  அமைச்சர் அன்பில் மகேஷ் பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து பேசினார்.

  திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 469 குடும்பங்களுக்கு இலவச கேஸ் அடுப்பு, 20 கிலோ அரிசி, வீட்டு உபயோக பொருட்கள், சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி 50 ஆயிரம் ஆகியவற்றை நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், கதிரவன் உள்ளிட்ட அரசு  அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

  அப்போது, இலங்கை தமிழர்களுக்கு எங்களை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது. இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற இலங்கை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்த கேள்விக்கு, இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும். பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வழக்கு போடுகின்றனர் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் குற்றம்சாட்டுகிறார்.

  ஆட்சியில் இருக்கும் போது சில சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை. அரசு எதை செய்ய முடியுமோ அதை தான் சட்ட ரீதியாக செய்து உள்ளோம். முதலமைச்சர் இதன் மீது நடவடிக்கை எடுப்பார். அவர்களுக்கு தெரிந்தது இந்த ஒரே பிரச்சினை மட்டும் தான். இதை வைத்து தான் அரசியல் செய்து வருகின்றனர்.

  பத்தாண்டு காலமாக எடப்பாடியும், பன்னீர்செல்வமும் முறையாக ஒழுங்காக கால்வாய்களை கட்டி இருந்தால், வெட்டி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சினை இல்லை. 200 வருடத்தில் 4வது முறையாக 100 செ.மீ மழை பெய்துள்ளது. முதலமைச்சர் நேரடியாக சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தேங்குவதற்கான காரணம் என்ன? எந்த இடத்தில் தண்ணீர் தேங்கி என்பதனை ஆய்வு செய்து அடுத்த ஓராண்டில் அதனை முழுமையாக சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  50 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் உள்ள மெட்ரோ வாட்டர் பைப்புகளை மாற்ற சொல்லி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
  எனவே குறை  கூறுவதிலாவது அவர்கள் ஒன்றிணைந்து கூறுவது என்பது சரிதான்.  திண்டுக்கல் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக திருச்சி அரியாறு மற்றும் கோறையாற்றில் அதிகபடியான நீர் தேங்கி உள்ளது. இது குறித்து பொது பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கணக்கிடு செய்து வருகிறார்கள், எனவே உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகூடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளத. அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
  2015ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகப் பெரிய மழையை தமிழகம் சந்தித்து வருகிறது.

  Must Read : தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு... இன்றைய காய்கறி விலை நிலவரம்

  பள்ளிக்கூடங்களில் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. சேதம் அடைந்த கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக இடிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளோம். சிபிஎஸ்இ மட்டுமே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைத்துள்ளனர். நம்மைப் பொருத்தவரை அது போன்ற தேர்வுகள் ஏதும் நடத்தவில்லை என தெரிவித்தார்.

  செய்தியாளர் - இ.கதிரவன், திருச்சி.
  Published by:Suresh V
  First published:

  Tags: Anbil Mahesh Poyyamozhi, KN Nerhu

  அடுத்த செய்தி