ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • Share this:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சமுதாயக் கூடத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 88 பயனாளிகளுக்கு ₹ 35 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவரது கருத்துக்களை ஏற்று செய்ய வேண்டிய உதவிகளை செய்கிறோம். அரசு அலுவலர்களும் செய்து வருகிறார்கள் என்றும் வாக்களித்தவர்கள் மட்டுமல்லாது வாக்களிக்காதவர்களுக்கும், வாக்கு உரிமையே இல்லாத இலங்கை தமிழர்களுக்கும் முதலமைச்சர் 317 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.

இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று அமைச்சராக இருக்கிறேன். இதை ஒரு நாளும் மறக்க மாட்டேன்.  இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘பள்ளிக் கல்வித் துறையின் அறிக்கை இன்று முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படும். பள்ளிகளைத் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலர்களும், ஒவ்வொருவிதமாக தெரிவித்துள்ளனர். இதில் சிலர் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், சிலர் 8 வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடர்பாக 31ஆம் தேதி கூட்டம் நடக்க உள்ளது. அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: