பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 415 மாணவர்கள் சுமார் ஒரு மணிநேரம் சமகோண ஆசனத்தில் அமர்ந்து சாதனை நடத்த தொடங்கினார்கள். மேலும் பி.கே.முனுசாமி என்பவர் களிமண்ணால் 30 நொடிகளில் சிலை செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். கோல்டன் புக் ஆப் உலக சாதனையில் இந்த சாதனை இடம் பெற்றது. நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக 27 நிமிடங்கள் சமகோண ஆசனம் செய்து 1 மணி 27 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனை படைத்தனர். இதில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘73 பேர் எனது திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்தவர்கள் வந்துள்ளது பெருமையாக உள்ளது. மாணவர்கள் விரைவாக வீட்டிற்கு சென்று நாளை பள்ளிக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் யோகா நடத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது கூறி இருந்தார். இதனை தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று நடக்க நடவடிக்கை எடுப்பேன். யோகா தேவையான ஒன்றுதான் உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்து கொள்ள தேவையான ஒன்று.
கருணாநிதி வயது முதிர்ந்த காலத்திலும் யோகா செய்தார். அ.தி.மு.கவின் தோழமை கட்சியான பா.ஜ.க இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi