ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாட்டில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி கொண்ட பள்ளிகளாக செயல்பட்டு வருவதும், அப்பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்கிற அதிர்ச்சித் தகவலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

  அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி தொடங்கி 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருகின்றது. அவ்வாறு உள்ள பள்ளிகளில் தமிழும் பயிற்று மொழியாக வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட பள்ளிகளாக மாற்றப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

  தகவல் உரிமைச் சட்டம் மூலம் பள்ளிக் கல்வித்துறையிடம் தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  குறிப்பாக ஆங்கில பயிற்று மொழியாக கற்பிக்கப்படுகின்ற அரசுப் பள்ளிகளில் தமிழும் பயிற்றுமொழியாக கொண்டு வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழி கொண்ட பள்ளிகளாக அவை மாற்றப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

  அரசு பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பா? 54 பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி இல்லை... : அதிர்ச்சித் தகவல்

  இது குறித்து பள்ளிக் கல்வித் துறையிடம் விளக்கம் கேட்டபோது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட பள்ளிகள் ஒன்றுகூட இல்லை என்று கூறியுள்ளது.

  இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘தமிழ் வகுப்புகளே இல்லை என்பது தவறானது. தமிழ் வழி வகுப்புகளை ஒரு மாணவர்கள் கூட தேர்ந்தெடுக்காமல் உள்ளனர். அதுகுறித்து விசாரிக்க கூறியுள்ளோம். விழிப்புணர்வு ஏற்படுத்த கூறியுள்ளோம். 54 பள்ளிகளில் தமிழ் வகுப்புகள் இல்லை என்று செய்தி வந்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கக் கூறியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Government school