Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை போல மாற்ற வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை போல மாற்ற வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

அனைவருக்கும்  அனைத்தும் சமமே  என்பதே  திராவிட  மாடல் ஆட்சி.  எவர்  ஒருவர்  எந்தளவுக்கு  பகுத்தறிவாளராக  உள்ளனரோ  அவர்களுடைய வயதும்  உயரும்  இளமையும்  கூடும். நாத்திகன்  என்றால்  கடவுள்  மறுப்பவன் அல்ல  வேதத்தை  மறுப்பவன்  தான்  நாத்திகன்- வீரமணி

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    குலக்கல்வி  திட்டம், புதிய  கல்வி  கொள்கை  எந்த  வடிவில்  வந்தாலும் இந்தியாவிலேயே  தடுக்கின்ற  ஆட்சியாக  தமிழக  அரசு  உள்ளது என ஆத்தூரில் நடைபெற்ற திராவிட கழக நிர்வாகியின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழக  தலைவர்  கி.வீரமணி  பேசினார்.

    சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அண்ணா  கலையரங்கத்தில்  திராவிட  கழக நிர்வாகி  தங்கவேலு  என்பவரின்  நூற்றாண்டு  விழா  நடைபெற்றது. இதில் திராவிடர்  கழகத் தலைவர்  கி.வீரமணி, தமிழக  பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர்  அன்பில்  மகேஷ்  பொய்யாமொழி  உள்ளிட்டோர்  கலந்து  கொண்டனர். விழாவில்  நூற்றாண்டு  மலரை  திராவிடர்  கழக  தலைவர்  வீரமணி வெளியிட  அமைச்சர்  அன்பில்  மகேஷ்  பொய்யாமொழி  பெற்றுக்  கொண்டார்.

    தொடர்ந்து  அமைச்சர்  பேசும்  போது,  திராவிட  இயக்கத்தில்  எல்லோரும் இளைஞர்களாகவே  இந்த  மேடையில்  உள்ளீர்கள். ஒரு  கால கட்டத்தில் இடுப்பில்  துண்டை  கட்டிய  காலத்தில்  குப்பன், சுப்பன்  என  ஒருமையில் அழைத்தனர். ஆனால் விழா மேடைகளில்  தற்போது  குப்பனுக்கும், சுப்பனுக்கும் தோலில்  சால்வை  அணிவித்து  மரியாதைக்குரிய  குப்பன்  அவர்களே, மரியாதைக்குரிய  சுப்பன்  அவர்களே  என  அழைக்கப்படுகிறது. இந்த  நிலையை மாற்றியது  திராவிட  இயக்கம் என்றார்.

    நேற்று  மதுரையில்  அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன்  கார்  மீது  செருப்பு  வீசப்பட்ட  நிகழ்வு  குறித்து  பேசிய  அமைச்சர் அன்பில்  மகேஷ்  பொய்யாமொழி  தமிழக  முதல்வர்  பொது  வெளியில்  அமைச்சர்கள்  நாகரீகமாக  பேச  வேண்டும்  என  அறிவுறுத்தியுள்ளார். ஆகவே  கண்ணிய  அரசியல்  நடத்த  வேண்டும்  என்று  நினைக்கிறோம். தயவு செய்து  தமிழகத்தை  மற்ற  மாநிலங்களை  போல்  என்ன  வேண்டாம். இங்கு மதவாத  கும்பலுக்கு  இடமில்லை  என்று  சாடினார்.

    இதனை அடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  பெரியார்  தொண்டராக  நாத்திக  தலைவராக  உள்ள  தங்கவேலு  அவர்கள்  நூறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட  60 ஆண்டுகளுக்கு  மேலாக  எங்களோடு  அவருக்கு மிக  நீண்ட  நெருக்கம்  கொண்டவர். 60 ஆண்டுகள் கடந்த  போதும்  அவர்கள்  என்ன  சாதி  என்று  இதுவரை  எங்களுக்கு  தெரியாது  இதுதான்  பெரியார் இயக்கம் என்றார்.

    மேலும் படிக்க: இது தமிழ்நாடு.. இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது - பாஜகவை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்

    திராவிட  மாடல்  ஆட்சி  என்றால்  என்ன  என்பது  போல்  சிலர்  கேள்வி கேட்கிறார்கள்  அனைவருக்கும்  அனைத்தும் சமமே  என்பதே  திராவிட  மாடல் ஆட்சி.  எவர்  ஒருவர்  எந்தளவுக்கு  பகுத்தறிவாளராக  உள்ளனரோ  அவர்களுடைய வயதும்  உயரும்  இளமையும்  கூடும். நாத்திகன்  என்றால்  கடவுள்  மறுப்பவன் அல்ல  வேதத்தை  மறுப்பவன்  தான்  நாத்திகன். கடவுள்  மறுப்பாளர்கள்  சாரசரி வயதை  விட அதிகம்  வாழ்கின்றனர்  என்று  உலக  சர்வே  கூறுகின்றது என்றும் தெரிவித்தார்.

    திராவிட மாடல்  ஆட்சி நூறாண்டு  ஆட்சி. குலக்கல்வி  திட்டம்  புதிய  கல்விக்  கொள்கை வடிவில்  தற்போது  உருவாக்குகிறார்கள் , இந்திய  ஒன்றியத்திலேயே  அதை தடுக்கின்ற  ஆட்சியாக  தமிழக  அரசு  உள்ளது , திராவிட  மாடல்  ஆட்சியை பார்த்து தான்  பிற  மாநிலங்கள்  திட்டங்களை  பின்பற்றுகின்றனர். ஏழை  எளிய சாமானியர்களுக்கான  ஆட்சியாக  திராவிட  மாடல்  ஆட்சி  உள்ளது என்ற அவர்,  கருப்பு உடை  என்பது  சாதாரணமானதல்ல  கொள்கை  பிடிப்போடு  உடையது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்  கருப்பு  உடை  அணிந்து  தான்  வாதாடுகின்றனர் எனவே  கருப்பு  சட்டை  என்பது  நீதி  கேட்பது ஆகும் என  பேசினார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: KC veeramani, Minister Anbil Mahesh

    அடுத்த செய்தி