ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றி காய்ச்சல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றி காய்ச்சல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  நேற்று முன் தினம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

  அதனை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என தெரிவித்தார்.

  தற்போது அமைச்சரின் உடல் நலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனை படி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Anbil Mahesh Poyyamozhi, Ma subramanian, Minister Anbil Mahesh, Swine Flu