ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொடர் மழை : பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

தொடர் மழை : பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

அதிகனமழையின் போது விவசாயிகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என அமைச்சர் அறிவுரை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  வடகிழக்கு பருவமழையின்போது வெப்பமண்டல சூறாவளி மற்றும் அதனுடன் தொடர்புடைய புயல்கள் காரணமாக மாநிலம் அதிகபட்ச பேரிடர்களை சந்திக்கிறது.2022-ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 5,908 வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் மழை வெள்ள நிலையை கண்காணித்து தகுந்த அறிவுரை வழங்கி விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக களத்தில் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

  விளை நிலங்களில் உள்ள சிறுசிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில்உள்ள, செடி கொடிகளை அகற்றிட வேண்டும்.
  வடகிழக்கு பருவமழையின்போது வெள்ள மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிட வேண்டும்.
  வெள்ள மழைக் காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொள்ளி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.
  மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரினைவடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல்.
  நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய மழை நின்று, நீர்வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இடவும்.
  போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளித்தல்.
  தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊரவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பானை கொண்டு தெளிக்கவும்.
  மழைக்காலத்தில் புகையான் பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் செல்லும் பொழுது வேம்பு சார்ந்த பூச்சி மருந்தாகிய அசாடிராக்டின் 0.03 சதவீத மருந்தை ஒரு ஹெக்டருக்கு 1000-மிலி என்ற அளவில் வேளாண் துறையின் பரிந்துரையின் படி உபயோகப்படுத்த வேண்டும்.
  மேலும் நவம்பர் 15ம் தேதி சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட கடைசி நாள் என்பதால் நிர்ணயித்த தேதிக்குள் பதிவு செய்திட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  Published by:Anupriyam K
  First published:

  Tags: Agriculture, Farmers