• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மழை: 2015ம் ஆண்டு போன்ற சூழல் ஏற்படாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை மழை: 2015ம் ஆண்டு போன்ற சூழல் ஏற்படாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை மழை

சென்னை மழை

2015ம் ஆண்டு ஏற்பட்டது வெள்ளம் அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி சரியான நேரத்தில் திறந்துவிடப் படாததால் ஏற்பட்ட நிலை. மீண்டும் அதுபோன்ற சூழல் ஏற்படாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 2015ம் ஆண்டு போன்ற சூழல் தற்போது இல்லை என்றும்  ஏரிகளின் நீர் அளவை கண்காணித்து  தேவைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    சென்னை மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்பு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  ஆய்வு மேற்கொண்டார். அவருடன் உயர் அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்.

    அப்போது அவர், சென்னையில் 12 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இரண்டு முறை சேவை துறைகளுடன் முதலமைச்சர் கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார். மாநகராட்சி மற்றும் குடிநீர் கழிவுநீர் வாரியம் காலையில் இருந்து பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சைதாப்பேட்டை ஒட்டிய அடையாற்றில் தடுப்புச்சுவர் கட்டும் பணி ஒரு அளவுக்கு நிறைவு பெற்றிருக்கிறது. இதன் காரணமாக மழை நீர் வீடுகளுக்குள் புகாது என்றும் அவர் தெரிவித்தார்.

    மழைபாதிப்புகள் இருக்கக் கூடிய சாலைகளை கண்டறிந்து அதனை சீர் செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழை நின்றால் மட்டுமே நீரை வெளியேற்றும் பணியை விரைவாக மேற்கொள்ள முடியும். அதற்கான பணியில் மாநகராட்சி தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

    இதையும் படிங்க: சென்னை மழை: 2015ம் ஆண்டுக்கு பின்னர் இதுதான் அதிகம்- தமிழ்நாடு வெதர்மேன்


    மேலும்,  2015ம் ஆண்டு ஏற்பட்டது வெள்ளம் அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி சரியான நேரத்தில் திறந்துவிடப் படாததால் ஏற்பட்ட நிலை.  சென்னையில் சீரழிவு ஏற்படுத்திய அந்த வெள்ளம் ஆட்சியாளர்களின் மெத்தன போக்கால் ஏற்பட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற நிலை மீண்டும் எப்போது ஏற்படாது.  ஏரிகளில் நீரின் அளவை கண்காணித்து தேவைக்கு ஏற்ப நடவடிக்கை மேற் கொள்வதற்கான உத்தரவை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தற்காலிக முகாம்கள் அமைப்பதற்கான சூழல் தற்போது எழவில்லை என்ற அவர், மழை பாதிப்பு பணிகளை சீர்செய்ய அரசு இயந்திரம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. அடையாறு ஆற்றின் ஓரம் உள்ள குடிசை பகுதிகள் தான் மழையால் முதலில் பாதிக்கப்படும். தற்போது பெரிய பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் படிக்க: ரெட் அலர்ட்: சென்னையில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: