சினிமாவை மிஞ்சும் சேஸிங்.. மணல் கடத்திச் சென்ற மினி லாரியை துரத்திப் பிடித்த போலீஸ் - வீடியோ

கடலூர் மாவட்டத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் மணல் கடத்திச் சென்ற மினி லாரியை போலீசார் துரத்திச் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 2:47 PM IST
  • Share this:
அமெரிக்கா போன்ற நாடுகளில் குற்றவாளிகளைப் போலீசார் பிடிக்கச் செல்லும்போது அவர்களது வாகனங்களில் உள்ள கேமராக்களில் அனைத்துக் காட்சிகளும் பதிவாகும். அதேபோல் தமிழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் தென்பெண்ணை ஆற்றில் இரவு பகல் பாராமல் மணல் கொள்ளை நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மினி லாரிகளில் மணல் கொள்ளை நடந்து வருவதால், நெல்லிக்குப்பம் போலீசார் தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார் தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக ஒரு மினி லாரி வந்துள்ளது. நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியும் வாகன ஓட்டுநர் நிற்காமல் வேகமாக மினி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.


போலீசாரும் உடனடியாக தங்கள் வாகனத்தில் அந்த மினி லாரியைத் துரத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள கிராமம் வழியாக புகுந்து மினி லாரி ஓட்டுனர் புயல் வேகத்தில் பறக்க போலீசாரும் விடாமல் மின்னல் வேகத்தில் துரத்தியுள்ளனர்.

5 கிலோ மீட்டர் துாரம் விரட்டிய நிலையில் ஓரிடத்தில் மினி லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரியை நிறுத்திய ஓட்டுநரும் உதவியாளரும் தப்பியோடிய நிலையில், போலீசார் லாரியை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க...அம்பலமாகும் போதைப்பொருள் சாம்ராஜ்யம் , பதற்றத்தில் கோலிவுட்... அடுத்து சிக்கப்போவது யார் ?

லாரியின் பதிவெண் அடிப்படையில் வாகன ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில், நெல்லிக்குப்பத்தில் நடந்த வாகன துரத்தல் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading