ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மினி பஸ் டிரைவர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மினி பஸ் டிரைவர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் பள்ளி மாணவியை கடத்தி  மினி பஸ் டிரைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன்(வயது 40). இவருக்கு திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்

இவரது மினிபஸ்ஸில் அடிக்கடி பள்ளிக்கு பயணம் செய்த ப்ளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்துக்கொளவதாகவும் ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

Also Read:  சென்னை : பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்டூழியம்... பெண் பயணி மீதும் தாக்குதல்... கைது செய்ய வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளார். இந்நிலையில் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். சிறுமியின் தாய்  சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மினி பஸ் டிரைவர் தங்கபாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: சிவக்குமார் ( திருமங்கலம்)

First published: