Home /News /tamil-nadu /

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் கனிமவளங்கள் ... தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் கனிமவளங்கள் ... தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்

கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் கனிமவளங்கள்

கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் கனிமவளங்கள்

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்க்கு மணல், ஜல்லி, குண்டுகற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கேரளவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தக்கோரி புளியரை போக்குவரத்துதுறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்க்கு மணல், ஜல்லி, குண்டுகற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த கனிம வளங்கள் முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாக கூறியும் அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சமூக அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ALSO READ |  தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சிதிலம்... கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் கோரிக்கை

    மேலும் இன்று பல்வேறு கட்சிகளை திரட்டி சாலை மறியல் போரட்டம் நடைபெற உள்ளாதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தமிழக - கேரள எல்லைப்பகுதியில்  சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம உதயசூரியன் தலைமையில்  கனிம வளங்களை கேரளவிற்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்,  போர்கால அடிப்படையில்  கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை ட்ரோன் கேமிராக்கள் வாயிலாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். இதன் காரணமாக இரு மாநில எல்லைகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ச.செந்தில், செய்தியாளர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kerala, Tenkasi

    அடுத்த செய்தி