Home /News /tamil-nadu /

தருமபுரி அரசு மருத்துவமனையில் ₹ 17.50 லட்சம் மதிப்பில் தாய்ப்பால் வங்கி!

தருமபுரி அரசு மருத்துவமனையில் ₹ 17.50 லட்சம் மதிப்பில் தாய்ப்பால் வங்கி!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறையில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

தாய்பால் வங்கியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சீனிவாசராஜ், சென்னை இந்தியன் ஆயில் கார்பரேசன் பொது மேலாளர் சீதாராமன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தாய்ப்பால் வங்கியில் தாய்ப்பாலை தானமாக கொடுப்பது பற்றியும் தாய்ப்பால் வங்கியின் நடைமுறை மற்றும் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டன.

மேலும், குழந்தை பிறந்தது முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் தாய்மார்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Also see:
Published by:Rizwan
First published:

Tags: Dharmapuri, Mother

அடுத்த செய்தி