நாளை முதல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும்: முகவர்கள் சங்கம்!

அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும்: முகவர்கள் சங்கம்!
மாதிரிப்படம்
  • Share this:
தமிழகம் முழுவதும் நாளை முதல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தபோது பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில், காவல்துறையின் கடும் கட்டுப்பாடு காரணமாக பால் விற்பனையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யும் பாலை சில்லறை வணிகர்களுக்கு விநியோகம் செய்யமுடியாத நிலை இருப்பதால், நாளை முதல் சில்லறை வணிகர்களுக்கு பால் விநியோகம் நிறுத்தப்படுவதாக கூறியுள்ளார்.


எனவே, அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம் என்றும், பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்