முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை அண்ணா சாலையில் நில அதிர்வு?

சென்னை அண்ணா சாலையில் நில அதிர்வு?

சென்னையில் நில அதிர்வு?

சென்னையில் நில அதிர்வு?

சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியாக தகவல் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை போன்ற இடங்களில் சில கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் பீதியடைந்ததாகவும் தகவல்கள் பரவின.

மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டது என்ற தகவல் தவறானது என்றும், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை எனவும் மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தரவுகள் படி சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதாக என டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டுள்ளது. இதுவரை அத்தகைய தகவல்கள்  எதுவும்  அந்த மையத்தில் இருந்து கிடைக்கப்பெறவில்லை” என தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Earthquake