ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

"எந்த ஒரு அவசரத்திற்கும் உதவி எண்கள் 139 & 138 மூலம் உங்களக்கு உதவ இந்திய ரயில்வே குடும்பம் காத்திருக்கிறது"

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் சமீப காலமாக பயணித்தவர்கள் பல்வேறு உடல்நல பாதிப்பு மற்றும் போதிய உணவு, குடிநீர் இன்றி மரணமடைந்த சம்பவம் நடந்த நிலையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  அதில், புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றடைய இந்திய ரயில்வே நாடு முழுக்க தினந்தோறும் 'ஷ்ரமிக் ஸ்பெஷல்' எனும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இந்த சேவையை உபயோகிக்கும் சில பயணிகளுக்கு ஏற்கனவே சில ஆரோக்கிய குறைபாடுகள் இருப்பதாக காணப்பட்டது .

  இது இன்றய கோவிட 19 ன் தொற்று காலத்தில் அபாயத்தை மேலும் மோசமடைய செய்கிறது. இதனால் இந்த முன்பே இருக்கும் ஆரோக்கிய குறைபாடுகளால் சில துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகள் பயணத்தின் போது நேர்ந்துள்ளன.

  இதை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகத்தின் ஆணையின் படி பாதிக்கப்படக்கூடிய பயணிகள் - அதாவது இணை நோயுற்ற தன்மையுடையவர்கள் (உதாரணத்திற்கு - உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள்) மற்றும் கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே அன்றி இது போன்ற பயணத்தை தவிர்க்கலாம்

  இந்திய ரயில்வே குடும்பம் பயண தேவை உள்ள அணைத்து குடிமக்களுக்காகவும் ரயில் சேவை 24 மணி நேரமும் கிடைக்க உழைத்து கொண்டிருக்கிறது. ஆனால் பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுடைய முக்கிய நோக்கம். ஆகவே, இந்த வேண்டுகோளுக்கு ஒத்துழைக்குமாறு நாங்கள் அணைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். பயணத்தின் போது எந்த ஒரு அவசரத்திற்கும் உதவி எண்கள் 139 & 138 மூலம் உங்களக்கு உதவ இந்திய ரயில்வே குடும்பம் காத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published:

  Tags: Migrant workers, Southern railway