• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வண்ண வண்ண விநாயகர் சிலைகள் : விழி பிதுங்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

வண்ண வண்ண விநாயகர் சிலைகள் : விழி பிதுங்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலைகள்

தமிழக அரசு தங்களக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share this:
பல லட்சம் ரூபாயில் செய்த விநாயகர் சிலைகளை, விற்பனை செய்ய முடியாததால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் வெளிமாநில தொழிலாளர்கள். தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை நம்பி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தடை காரணமாக மிகப்பெரிய இழப்பை சந்தித்த தொழிலாளர்கள், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை செய்துள்ளனர். ஒரு அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகளை பல லட்சம் ரூபாய் செலவில் செய்து உள்ளனர். ஆனால் தமிழக அரசு தடை விதித்ததால் எந்த சிலைகளும் விற்க முடியாமல் அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் காவல் துறையினரும் விநாயகர் சிலைகளை யாருக்கும் விற்கக்கூடாது என கூறியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். விநாயகர் சிலைகளை விற்க முடியாமல் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது விழிபிதுங்கி உள்ளனர். கடனுக்கு வட்டி கடன் வாங்கிய செய்த சிலைகளை தற்போது என்ன செய்ய போகிறோம் அதை எப்படி அப்புறப் படுத்தப் போகிறோம் என்று தெரியாமல் இருப்பதாகவும் இனி அடுத்த வேளை உணவுக்கு கூட தங்களிடம் வருமானம் இல்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.

Must Read : விநாயகர் சதுர்த்தி : போயஸ் கார்டன் ஜெய விநாயகர் கோயிலில் சசிகலா வழிபாடு

இந்நிலையில், தமிழக அரசு தங்களக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: