தமிழகத்தில் நடுநிலை பள்ளிகள் அடுத்த வாரம் திறப்பு - தகவல்

மாதிரிப் படம்

தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகள் அடுத்த வாரம் முதல் திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 • Share this:
  தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது.

  பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு அதிகரிக்காமல் இருந்தது.

  இதையடுத்து நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  Also Read : இதுக்கு போய் ரூ.1.50 கோடி செலவா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

  இந்த ஆலேசானை கூட்டத்தில், தமிழகத்தில் நடுநிலை பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். முதலில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகள் திறக்கப்படுகிறது. அதன்பின் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை திறக்கப்படலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு அழைப்பது, இடைவெளி விட்டு அமர வைப்பதில் ஏற்படும் சிக்கல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: