கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் காப்பியடிக்க மைக்ரோ பிட்டை தயாரித்ததை கண்டறிந்து அரசு தேர்வுகள் பறக்கும் படை குழுவினர் அதனை கடந்த செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் 200 மையங்களில் பிளஸ் 2 தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் பிளஸ் 1 தேர்வு 10-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொல்லிமலை வாழவந்தி நாடு ஜி.டி.ஆர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அரசு தேர்வுகள் இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) பொன்.குமார் திங்கள்கிழமை கொல்லிமலைக்கு ஆய்வு பணிக்காக சென்றார். அப்போது வாழவந்தி நாட்டிலுள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்திருந்தனர். அவர் அங்கு சென்று பார்த்தபோது மைக்ரோ பிட் என்னும் சிறிய வகையிலான பேப்பரை பாடப் புத்தகத்தில் இருந்து ஜெராக்ஸ் எடுத்து கொண்டிருந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இணை இயக்குனர் அவற்றை பறிமுதல் செய்தார். மேலும் அந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரை எச்சரித்ததுடன், மாணவ மாணவிகளிடம் இருந்து சுமார் அரை கிலோஎடை அளவில் ஜெராக்ஸ் பிட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள், தேர்வு மைய பணியில் இருந்த வர்ள் மாற்றம் செய்யப்பட்டனர்.
Must Read : நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி... வைரலாகும் போஸ்டர்கள்
அதன்டிப, அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன் குமார் சோதனை செய்த விவகாரத்தில் மூன்று தேர்வு மையம் அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு புதிதாக நான்கு ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மைக்ரோ பிட்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக பாதுகாப்புக்காக பறக்கும் படை அமைக்க பட்டு இன்று இயற்பியல் தேர்வு நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் - ரவிக்குமார், நாமக்கல். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.