முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின்சார கட்டணம் செலுத்தாதோரின் இணைப்பை துண்டிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

மின்சார கட்டணம் செலுத்தாதோரின் இணைப்பை துண்டிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

மின்சார வாரியம்

மின்சார வாரியம்

ஜூலை 31-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :

தாழ்வழுத்த மின் இணைப்பு கட்டணங்களை செலுத்தாதவர்களின் மின் இணைப்பை மே 17 ஆம் தேதி வரை துண்டிக்க கூடாது என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள், தங்களது மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்தாமல் இருந்தால்

தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6-ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மின்கட்டண கவுண்டா்களுக்கு வருவதைத் தவிா்க்கும் வகையில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மே 6ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதிகெடுவை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 31ஆம் தேதி வரை தாழ்வழுத்த மின்னிணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடக்கோரியும் வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் ராஜசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள், விவசாயிகள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 6ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்துவது என்பது சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார்.

தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றவர்களில் 50 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாகவும், சிறு குறு தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களாகவும் இருப்பதால் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று காணொளி காட்சி மூலமாக நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயனா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததெ. அப்போது, தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் வருமானம் இழந்திருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் கருத்தில் கொண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மே 17 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்க இடைக்கால தடை விதித்தனர்.

மேலும், இது தொடர்பாக மே 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Lockdown, TNEB