• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேரறிவாளன் விவகாரம்: ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பப்படவில்லை - உள்துறை அமைச்சகம்

பேரறிவாளன் விவகாரம்: ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பப்படவில்லை - உள்துறை அமைச்சகம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை வழங்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என குடியரசுத் தலைவர் மாளிகை பதிலளித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் மாளிகையின் கவனத்திற்கு  மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு செல்லவில்லை. ஆனால் குடியரசுத் தலைவரின் பெயரில் உத்தரவை மட்டும் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஏற்கெனவே குறைக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசின் பரிந்துரை 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்ட்டது.

இதற்கு 2 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் 2018 ஏப்ரலில் வழங்கப்பட்ட பதிலில் குடியரசுத் தலைவரின் பெயரால் இப்பரிந்துரை நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நிராகரிப்புக்கான கடிதத்தை உள்துறை இணைச் செயலாளர் வழங்கியிருந்தார்.

இந்த கடிதம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டதா என்பதை அறியும் நோக்குடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் இது போன்ற பரிந்துரை வழங்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என குடியரசுத் தலைவர் மாளிகை பதிலளித்தது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள பதிலில் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை அனுப்பப்படவில்லை எனவும், அமைச்சரவையின் உயர்மட்ட அளவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: