கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இக்கட்டான சூழலில்...’ : நன்றி தெரிவித்த ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

பாபநாசம் தொகுதி வேட்பாளரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான எம்.எச். ஜவாஹிருல்லா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஒருவார காலம் மருத்துவமனையில் இருக்கும் நிலை ஏற்பட்டபோது, தொகுதியில் பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பாபநாசம் தொகுதி வேட்பாளரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான எம்.எச். ஜவாஹிருல்லா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஒருவார காலம் மருத்துவமனையில் இருக்கும் நிலை ஏற்பட்டபோது, தொகுதியில் பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றதேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதை வெறும் வாக்களிப்பு என்று மட்டும் கருதாமல் தமிழக மண்ணின் தன்மானத்தையும் தனித்தன்மையையும் பாதுகாத்திட தரப்பட்ட மாபெரும் பங்களிப்பு என்றும் கருதி நன்றி நவில்கிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அல்லும் பகலும் அயராமல் சுற்றிச் சுழன்று நெஞ்சுறுதியுடன் களப்பணியாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் உறவுகளுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

    மமக போட்டியிட்ட பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணியாற்றிய திமுகவின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடைய நிர்வாகிகளின் கண்துஞ்சாக் களப்பணிகளுக்கும் கனிவான நன்றி.

    பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஒருவார காலம் மருத்துவமனையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் நான் நேரடியாகப் பரப்புரையில் இல்லாத சூழலில் தொகுதி முழுவதும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு களப்பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை ஈடாகாது. அவர்களது உழைப்பிற்கு என்றென்றும் நான் கடன்பட்டுள்ளேன்.

    Must Read :  2000 ரூபாய் டோக்கன் : தஞ்சையில் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் வழங்கிய அமமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

    கொரோனா அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி. மீளட்டும் தமிழகம். இனி ஆளட்டும் சமூக நீதி” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: