• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விவசாய நிலங்களைக் காக்க, எட்டு வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்க - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

விவசாய நிலங்களைக் காக்க, எட்டு வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்க - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் காக்க எட்டு வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய நிலங்களை அபகரித்து சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு விதித்த தடை செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

    மேலும் கூறுகையில், ”இந்த 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் பத்தாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகும் என்பதால் மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றன.

    உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ’முதல் கட்டமாகச் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் வருவாய்த்துறை வழிகாட்டுதல்களுடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

    Also read: ஐஐடியில் தங்கப்பதக்கம் வென்று புலம்பெயர் தொழிலாளியின் மகன் சாதனை

    மேற்குறிப்பிட்டுள்ள உத்தரவின்படி இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனே உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தால் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் காக்க இத்திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்."

    இவ்வாறு ஜவாஹிருல்லா தன் அறிக்கையில் தெரிவித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: