பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு... ஜவாஹிருல்லா கண்டனம்!

ஜவாஹிருல்லா

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முற்றிலும் பாரபட்சத்துடன் நடந்து சிறுபான்மை மக்கள் மீதான தனது குரோதத்தை பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் தேர்வில் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  இது தொடர்பாக ஜவாஹிருல்லா பெருமை வாய்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த எம்.செல்வம் என்பவரை நியமனம் செய்திருக்கிறார். தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான திரு.பன்வாரிலால் புரோகித். பேராசிரியர் எம் செல்வம் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதில் முறையான கல்விப் புலமையும் ஆராய்ச்சியறிவும் பின்பற்றப்படவில்லை.

  மேலும் தகுதிவாய்ந்த போட்டியாளர்களை புறக்கணித்து முறைகேடாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பொறுப்பிற்கு பல்வேறு பேராசிரியர்கள் விண்ணப்பித்த போதிலும் இறுதியாக ஐந்து பேரை மட்டும் தேர்வு செய்து கொடுத்தது துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளுநரால் அமைக்கப்பட்ட குழு இறுதியாக அழைக்கப்பட்ட ஐவரில் பேராசிரியர் முனைவர் தாஜூதீன் என்பவர் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தாவர நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

  கல்விப்புலமையிலும் ஆராய்ச்சிப் பங்களிப்பிலும் தகுந்த தகுதியைப் பெற்றுள்ளார். தற்போது நியமிக்கப்பட்ட பேராசிரியர் செல்வம் என்பவரைக் காட்டிலும் உயர்தர ஆராய்ச்சி இதழ்களில் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி பார்வையாளர்களிடமிருந்து அதற்கான அங்கீகாரக் குறியீடுகளையும் அதிகமாகப் பெற்றுள்ளார்.

  மற்ற நால்வரைக் காட்டிலும் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவராகத் தனது கல்விப் பங்களிப்பைச் செய்துள்ளார். ஆனால் சிறுபான்மையினருக்குக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எப்போதாவதுதான் கிட்டும் இந்த அரிய வாய்ப்பைப் பறிக்கும் விதமாகத் தமிழக ஆளுநர் அவர்கள் பேராசிரியர் முனைவர் தாஜூதீன் அவர்களைத் துணைவேந்தராக தேர்ந்தெடுக்காமல் வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமனம் செய்திருக்கிறார்.

  Also read... மேடை அமைத்து காத்திருந்த தொண்டர்கள்.. கையசைத்துவிட்டு சென்ற ஸ்டாலின்...!

  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முற்றிலும் பாரபட்சத்துடன் நடந்து சிறுபான்மை மக்கள் மீதான தனது குரோதத்தை பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் தேர்வில் நடத்திக் கொண்டிருக்கிறார். இல்லையெனில் உலகின் தலைசிறந்த நுண்ணுயிரியலாளராக விளங்கும் பேராசிரியர் தாஜூதீனே துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பார். கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் ஒரு முஸ்லிம் கூட தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களில் துணை வேந்தராக நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

  தொடர்ந்து கல்வி உயர் பணி வாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவது முற்றிலும் வேதனைக்குரியது. பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தாராக அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள பேராசிரியர் தாஜூதீன் அவர்களை நியமனம் செய்ய கோருகின்றேன் என்று தனது அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: