திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூரை அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூர் நகரத்தை அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசைக் கோரி வருகின்றனர்.
இந்தியாவிற்கு மிக அதிக தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முதன்மையான நகரமாக ஆம்பூர் விளங்குகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு நகரமாகவும், வேலூருக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைத் தரக்கூடிய சார் பதிவாளர் அலுவலகம், மனிதநேய மக்கள் கட்சியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட புதிய போக்குவரத்து வட்டார அலுவலகம், கல்வி நிலையங்கள் ஆம்பூரில் உள்ளன.
Also read... Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?
மேலும் ஆம்பூரில் 6 வழி தேசிய நெடுஞ்சாலையும் கடக்கிறது, இதே போல் நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில்கள் நின்று செல்லும் பெரிய ரயில் நிலையமும் ஆம்பூரில் அமைந்துள்ளது .மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் ஆம்பூர் நகரமே முன்னிலையில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பதற்கு ஆம்பூருக்கே அதிக தகுதி உள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூர் நகரத்தை அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambur, Jawahirullah