அரசு கல்லூரியில் நிதி வசூல் முறைகேடு எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் விசாரணை

ஸ்டான்லி அரசு மருத்துவமனை

கல்லூரி நிர்வாகத்துக்கும் பண விவகாரத்துக்கு தொடர்பு இல்லை என அரசு கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.

  • Share this:
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருந்தியல் துறை, அறுவை சிகிச்சை துறை, மகப்பேறு மருத்துவத் துறை, குழந்தைகள் நலத்துறையின் தேர்வு நடத்துபவர்கள் எம்.ஜி.ஆர். பல்கலைகழக தேர்வுக்குழுவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் வெளியிலிருந்து வரும் தேர்வு நடத்துபவர்களுக்கான செலவு என இறுதியாண்டு மாணவர்களிடமிருந்து அதிக தொகையில் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஸ்கிரீன்ஷாட்டுகள் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி கோரப்பட்ட கட்டணத்தை செலுத்த முன் வராததால், தான் தேர்வில் பெயிலாக்கப்பட்டதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் விசாரணை நடத்தியுள்ளது. மேலும், இந்த விசாரணை தேர்வு ஒழுங்கு குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக அறிக்கையில், வாட்சாப் ஸ்கிரீன் ஷாட்டுகளில் பாடத் துறைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலும்', 'தேர்வு நடத்துனர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட தேவைகளுக்காக' நிதி வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் இது போன்ற கட்டண வசூலை ஊக்குவிப்பது இல்லை. இதற்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ஸ்கிரீன்ஷாட்டுகளை பார்க்கும் போது இது ஒரு துறை மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து துறை மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக தேர்வு ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் தரும் வரை மருந்தியல், அறுவை சிகிச்சை, மகப்பேறு  மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் தேர்வு நடத்துவோர் அந்த குழுவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் புகாரளித்த மாணவி, தேர்ச்சிக்கு தேவையான மதிப்பெண்ணை விட 7 மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருப்பதால், அவருடைய தேர்வு முடிவுகள் மாற்றப்பட வழியில்லை என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

புகாரின் அடிப்படையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவின் பேரில் தேர்வு முறையாக நடைபெற்றதா, பண முறைகேடு நடைபெற்றுள்ளதா என கண்டறிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இது குறித்து தேர்வு முறையாக நடைபெற்றதா என விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மருத்துவர் ஏ ஜமிலா கூறுகையில், முதல் கட்ட விசாரணை நடத்தி முடித்துள்ளோம். அதில் தேர்வு நடத்துபவர்கள் முறையாக மதிப்பெண் அளித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. கல்லூரியில் உள்ள இரண்டு தேர்வு நடத்துபவர்கள் மற்றும் வெளியில் இருந்து வந்த இருவர் அதோடு சம்பந்தப்பட்ட மாணவி அனைவரையும் விசாரித்து இந்த குழு முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

இது குறித்து பண முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பேராசிரியர் ஜஸ்வந்த்,
‘மாணவியின் தோல்விக்கும் பணம் செலுத்தாதக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகைக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இறுதியாண்டு மாணவர்கள் 246 பேர் உள்ளனர். இதில் 223 பேரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மாணவர்களுக்குளேயே வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவி மட்டுமல்லாமல் மேலும் 22 பேர் அந்த தொகை செலுத்தவில்லை. ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ரூ.10 ஆயிரம் என்பது பெரிய தொகைதான். மாணவர்களுக்குள்ளேயே அதனை வசூலித்து வந்துள்ளனர்.’ என்றார்.

இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தை என்னை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அவரது புகார் முறையாக விசாரிக்கப்பட்டுள்ளது. விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களின் தேர்வுகளோடு தொடர்பில்லாத துறைகளிலிருந்தே உறுப்பினர்களை நியமித்துள்ளேன். நன்றாக படிக்கும் மாணவராக இருந்தாலும் தேர்வு என்பது அந்த நேரத்தில் நமது செயல்திறன் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே அமையும்.

Must Read : ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டமன்ற வளாகமாக மாற்றக் கூடாது - ராமதாஸ் வேண்டுகோள்

இந்த விவகாரத்தை கட்டணத்துடன் இணைத்து பேசுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஆண்டு நான்கு தேர்வு நடத்துபவர்கள் இருந்தனர். இரண்டு பேர் எங்கள் கல்லூரியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு என தனியாக உணவு தங்குமிடம் என செலவு கிடையாது. மற்றொருவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலிரிந்து வந்தார். எனவே அவருக்கும் தங்குமிட செலவு கிடையாது. மற்றொருவர் ஆன்லைனில் பங்கேற்றார்.” என்று கூறினார்.
Published by:Suresh V
First published: