புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவம் - ஓ.பி.எஸ் கண்டனம்

எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார்

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவம் - ஓ.பி.எஸ் கண்டனம்
எம்.ஜி.ஆர் சிலை | ஓ.பன்னீர் செல்வம்
  • News18
  • Last Updated: July 24, 2020, 8:03 AM IST
  • Share this:
புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்நிலையில், திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்


படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு

மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading