ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர்!

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டன. சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் விழா நடைபெறாத நிலையில், வருகிற 30 ஆம் தேதி சென்னையில் இறுதி விழா நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவுக்காக நாகர்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைப்பதோடு, 67 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேரூரையாற்றுகிறார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  Published by:Saroja
  First published:

  Tags: ADMK, EPS, Kannyakumari, MGR Century Festival, Nagarkovil, OPS