தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால் ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு...!

சென்னை உயர் நீதிமன்றம்

விஸ்வநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2016ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2016ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திருப்பி அளித்து விட்டு எம்.ஜி.ஆர்.ஐ நினைவுபடுத்தும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Also read... சிபிசிஐடி, சைபர் குற்றப் பிரிவில் பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆர்'களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

தங்கள் கட்சி சார்பில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆவடி தொகுதியில் பொது சின்ன பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அதை தனக்கு ஒதுக்கவில்லை எனவும், அதனால் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: