ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எம்.ஜி.ஆர் நினைவு நாள் : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தனிதனி அணியாக மரியாதை!

எம்.ஜி.ஆர் நினைவு நாள் : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தனிதனி அணியாக மரியாதை!

எடப்பாடி பழனிசாமி,ஓபன்னீர் செல்வம், சசிகலா தனிதனியாக எம்.ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை

எடப்பாடி பழனிசாமி,ஓபன்னீர் செல்வம், சசிகலா தனிதனியாக எம்.ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை

எம்.ஜிஆரின் நினைவு நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் தனித்தனியாக அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்தும், மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அதிமுகவினர் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பெயர் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு அனுப்பியுள்ள நோட்டீஸ் டம்மி நோட்டீஸ் என தெரிவித்தார்.

இதையும் படிங்கள்:தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்!

அதேபோல சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் சசிகலா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் பொதுச்செயலாளராக தொடர்வதாக கூறினார். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும் எனவும் சசிகலா தெரிவித்தார். மேலும் அதிமுக தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

First published:

Tags: MGR, OPS - EPS, Sasikala