’டார்ச் லைட் சின்னம் வேண்டாம்’ : தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் - கமல்ஹாசனுக்கு உதவுகிறதா எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி

’டார்ச் லைட் சின்னம் வேண்டாம்’ : தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் - கமல்ஹாசனுக்கு உதவுகிறதா எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி

கமல்ஹாசன்

'டார்ச் லைட்’ சின்னம் தங்களுக்கு வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த நாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது. அந்தத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனையடுத்து, டார்ச் லைட் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பணியில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் தீவிரமாக இறங்கினர். தற்போது, டார்ச்லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமாக மக்களிடம் இடம்பெற்றுள்ளது. தற்போதும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டார்ச்லைட் சின்னம்தான் உள்ளது.

இந்தநிலையில், அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்ட எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன், வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: