கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலம்: இஸ்லாமியர்களுக்கு மெக்கா: அதிமுகவினருக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலம்: இஸ்லாமியர்களுக்கு மெக்கா: அதிமுகவினருக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜு.

கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல அ.தி.மு.கவினருக்கு எம்.ஜி,ஆர், ஜெயலலிதா நினைவிடம் முக்கியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 • Share this:
  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவுக்கு மதுரையிலிருந்து தொண்டர்கள் செல்வது குறித்து மதுரை மாநகர் மாவட்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை அ.தி.மு.க அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தேர்தல் வந்து விட்டது. மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல. தேர்தலின் போது வேல் குத்த கூடச் செய்வார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார்.

  பசும் பொன்னுக்குச் சென்றவர் அங்கு வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டி விட்டார். கபட வேடதாரி. அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது’ என்று தெரிவித்தார். சசிகலா தமிழக அரசியலில் ஈடுபடவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசுயது குறித்து கேட்டதற்கு, ‘அவர்கள் சொந்த கருத்தை கூறுகிறார். கூட்டணியில் உள்ளவர்களை இப்படி பேசுங்கள் என கூற முடியாது. கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் முக்கியம். இஸ்லாமியர்களுக்கு மெக்கா முக்கியம். அது போல் அதிமுக தொண்டர்களுக்கு MGR, ஜெயலலிதா நினைவிடம் முக்கியம்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: