Home /News /tamil-nadu /

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ்: இரட்டைத் தலைமைதான் நல்லது- எம்.ஜி.ஆர் பேரன்

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ்: இரட்டைத் தலைமைதான் நல்லது- எம்.ஜி.ஆர் பேரன்

எம்.ஜி.ஆர் பேரன்

எம்.ஜி.ஆர் பேரன்

ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். அ.தி.மு.கவுக்கு இரட்டைத் தலைமைதான் வேண்டும் என்று எம்.ஜி.ஆர் பேரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வீட்டில் அவரது பேரனும் அ.தி.மு.க எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமான ஜூனியர் எம்.ஜி.ஆர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சென்று கொண்டுள்ள நிலையில் அது சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், ‘எம்.ஜி.ஆர் வேர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சி இது. அதன் பின்பு ஜெயலலிதாவால் காக்கப்பட்டது. ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே ஓ.பன்னீர் செல்வத்தை நம்பி கட்சிப் பொறுப்பை கொடுத்தார். ஓ.பன்னீர் செல்வம் அதற்கு விஸ்வாசமாக நடந்துகொண்டார். எம்.ஜி.ஆரின் பை-லாவின் படி  தொண்டர்களால் தேர்வு செய்படுபவர்களையே அ.தி.மு.க கட்சி ஏற்றுக்கொள்ளும்.

தற்போது ஒற்றைத் தலைமை ஏன் என தெரியவில்லை, சட்டப்படி இருவரும் கையெழுத்து போட்டால் தான் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியும். அப்படிப் பார்த்தால் சீனியர் ஓ.பன்னீர் செல்வம்தான். அவரை தான் தலைமையை ஏற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுக்கணும். எனிலும் இரட்டைத் தலைமை இருந்தால் கட்சி இன்னும் கட்டிக் காக்கப்படும்.

இப்போ கட்சியும் சின்னமும் ஓ.பன்னீர் செல்வத்திடம் தான் உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து தலைமை வகித்தால் கட்சி வேற லெவலுக்கு போகும். மிகப் பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக அசைக்க முடியாதபடி வளரும். எனவே ஒற்றை தலைமையை தவிர்க்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வி ஏன் ? ஓ.பன்னீர் செல்வம் விட்டு கொடுத்ததால் தான் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவரானார்.

அ.தி.மு.கவை பா.ஜ.க பிரித்துவிட்டது என்பது தவறு - ஜி.கே.வாசன் விளக்கம்

அடுத்த பொதுக்குழு நீதிமன்ற உத்தரவுபடி நடக்காது. தொண்டர்கள்தான் அ.தி.மு.கவில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வத்தைக் கட்சியை விட்டு நீக்க முடியாது. ஓ.பன்னீர் செல்வம் தான் எடப்பாடி பழனிசாமியை நீக்கமுடியும். மேலும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை  அவமானப்படுத்தியது அராஜகமான செயல்.

மேடையில் வளர்மதி எம்.ஜி.ஆர் பாட்டை பொதுக்குழுவில் தப்பாக பாடுகிறார் என்றும் எடப்பாடி அடுத்த எம்ஜிஆர் இல்லை. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. அவர் கடவுள் போன்றவர். ஒரே எம்.ஜி.ஆர்  தான்’ என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: சோமசுந்தரம், ராமாபுரம்.
Published by:Karthick S
First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam

அடுத்த செய்தி