ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

”பேரவையை அதிமுகவில் இணைக்க 6 மாதமாக முயல்கிறேன்; அழைப்பு வரும் வரை காத்திருப்போம்” ஜெ தீபா

”பேரவையை அதிமுகவில் இணைக்க 6 மாதமாக முயல்கிறேன்; அழைப்பு வரும் வரை காத்திருப்போம்” ஜெ தீபா

ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன்

ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என்று பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.

தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகுவதாக தீபா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து, தீபா பேரவையில் இருந்த தலைமை நிலைய நிர்வாகிகள் அதிமுகவுக்கு திரும்பியுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி கூறுகையில், “எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை

அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம்.

அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தீபா அவர்கள் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என கூறியிருந்தார் அதனடிப்படையில் இன்று இந்த கடித்தை வழங்கயுள்ளோம் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களையும் இது குறித்து சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “அதிமுக வில் என்னுடைய பேரவையை இணைக்க ஆறு மாதங்களாக முயன்று வருகிறேன். இன்று அதிகாரப்பூர்வமாக எங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் பெயர்களோடு மனுவும் கொடுத்து விட்டேன். ஆனால், தற்போது வரை எங்களை இணைத்துக்கொள்வது குறித்து அதிமுக தலைவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை .

அதிமுக தான் எங்களுடைய கட்சி. அவர்களிடம் இருந்து அழைப்பு வரும் வரை காத்திருப்போம். அதிமுக அடிப்படை தொண்டராக சேர்த்துக் கொண்டாலே போதும் , எந்த பொறுப்பும் எனக்கு தேவையில்லை. முழுநேரம் கட்சி பணியாற்றும் உடல்நிலையில் நான் இல்லை, அதனாலேயே நான் என் பேரவையை கலைக்கும் முடிவை எடுத்தேன்.

ஜெயலலிதாவின் பூர்விக சொத்துக்களை சட்டப்படி மீட்டு பின்னர் ட்ரஸ்ட தொடங்கி மக்களுக்கு சேவையாற்ற திட்டம் உள்ளது. நான் இறந்த பின்னரும் இயக்கம் நூறாண்டு காலம் இருக்க வேண்டும் என்று தான் ஜெயலலிதா கூறினார் , தன்னுடைய சொத்துக்களை ஆளாளுக்கு பிரித்து சூறையாடி கொள்ளுங்கள் என அவர் கூறவேயில்லை

தனக்குப் பின்னர் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற அதிமுகவுடன் இணைய உள்ளேன்” என்று தீபா கூறியுள்ளார்.

First published:

Tags: ADMK, J Deepa