முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திரையிலும் அரசியலும் ஆளுமை செலுத்திய தலைவர்... எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம்.. இன்று 104வது பிறந்தநாள் (வீடியோ)

திரையிலும் அரசியலும் ஆளுமை செலுத்திய தலைவர்... எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம்.. இன்று 104வது பிறந்தநாள் (வீடியோ)

சிவாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,

சிவாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,

மாபெரும் மக்கள் தலைவராய் வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் இன்று. அவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழக அரசியலில் இன்றும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவே திகழும் எம்.ஜி.ஆர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகராய் வாழ்க்கையை தொடங்கி ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைவராய் உயர்ந்து தமிழகத்தில் இன்றும் மறக்கமுடியாத பெயராய் சரித்திரம் படைத்தவர் தான் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ராமச்சந்திரன். சதி லீலாவதி படம் மூலமாக திரையில் தோன்றிய இவர், சினிமாவையே தனது பிரசார மேடையாக்கி தமிழக முதலமைச்சர் எனும் அரியணையை எட்டிப் பிடித்தவர்.

' isDesktop="true" id="395071" youtubeid="gDqLGe2X19w" category="tamil-nadu">

சிறந்த மகன், தலைசிறந்த தனையன், ஊருக்கு உழைக்கும் தலைவர், அநியாயங்களை தட்டிக் கேட்கும் ஹீரோ என எம்.ஜி.ஆர் ஏற்ற கதாபாத்திரங்களால் இவரை தங்கள் வீட்டு பிள்ளையாக மக்கள் கொண்டாடினர்..

' isDesktop="true" id="395071" youtubeid="nxTpFzwJLnY" category="tamil-nadu">

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது பாடல் மூலம் கவர்ந்தவர் எம்ஜிஆர்..

' isDesktop="true" id="395071" youtubeid="cTii8Jgh7a4" category="tamil-nadu">

தனது ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கெட்டப்புகளில் தோன்றுவது, அதற்கு ஏற்றாற்போல், நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் மாற்றுவதிலும் எம்.ஜி.ஆர். ஒரு கில்லாடி...

' isDesktop="true" id="395071" youtubeid="jS7tIZvGbHs" category="tamil-nadu">

தாம் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் ஏழை எளியவர்களின் துயர் துடைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார்.

' isDesktop="true" id="395071" youtubeid="Mu9oQL3d31A" category="tamil-nadu">

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிரச்சாரத்திற்கு செல்லாமலே வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர். இதுவே திரையிலும், அரசியலும் அவரது ஆளுமைக்கு சிறந்த சான்று...

' isDesktop="true" id="395071" youtubeid="Z9rjDWeGfQM" category="tamil-nadu">

வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்ற சொல் எம்ஜிஆர் வாழ்வில் உண்மையாகிப்போனது. எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் இன்றும் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக திகழ்கிறது என்றால் அது பொய்யில்லைp

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Happy BirthDay, MGR