• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்த எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு தடை!

லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்த எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு தடை!

லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்த எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு தடை!

லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்த எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு தடை!

பிரபல தனியார் ஹோட்டலான லீ மெரிடியன் ஹோட்டலின் 423 கோடி ரூபாய் கம்பெனி சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தை எம்ஜிம்எம் ஹெல்த் கேர் நிறுவனம் கையகப்படுத்த தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

  • Share this:
    அப்பு ஹோட்டல் என்ற நிறுவனத்தின் பெயரில் சென்னை மற்றும் கோவையில் பிரபல தனியார் ஹோட்டலான லீ மெரிடியன் ஹோட்டல் இயங்கிவருகிறது.

    இந்த ஹோட்டல் நிர்வாகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் திவாலாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இதன் நிர்வாகம் மற்றும் சொத்துக்களை மீட்டெடுக்க தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் நடவடிக்கை மேற்கொண்டது.

    Also read:  இனி இவர்களெல்லாம், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    இந்த சொத்துக்களை மீட்டெடுக்க எம்ஜிம் ஹெல்த்கேர் நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.கே.ராஜகோபாலன் முன்வந்தார். தீர்பாயத்தின் மீட்டெடுப்பு அதிகாரி ராதகிருஷ்ணன் தர்மராஜன் சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தின் மதிப்பை 423 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தார். இந்த மதிப்பீட்டை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயமும் உறுதி செய்திருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் லீ மெரிடியன் இயக்குனர் பெரியசாமி பழனிகவுண்டர் செய்திருந்த மனுவில், சொத்து மதிப்பீடு தவறாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் சுமார் 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மதிப்பீடு செய்வதில் முறையான சட்டவிதிகள் நடைமுறைகள் பின்பற்றவில்லை என தெரிவித்திருந்தார்.

    நிறுவனத்திற்காக கடன் வழங்கியவர்களுக்கு கடனை செலுத்த தயாராக இருப்பதகாவும், 450 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவும் தான் தயார் என்றும் அதற்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எம்ஜிஎம் நிறுவனம் சார்பில் ஏற்கனவே 150 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் எம்ஜிஎம் ஹெல்த் கேர் நிர்வாக இயக்குனர் எம்.கே.ராஜகோபாலன் லீ மெரிடியன் சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கு குறித்து மீட்டெடுப்பு அதிகாரி மற்றும் எம்ஜிஎம் நிறுவனர் ராஜகோபாலன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: