வேலைகேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக தனது 2 பவுன் செயினை வழங்கிய மாணவி: நெகிழ்ந்த முதல்வர்

வேலைகேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக தனது 2 பவுன் செயினை வழங்கிய மாணவி

அந்த மனுவுடன் செளமியா, கொரோனா நிதிக்காக தான் அணிந்திருந்த 2 பவுன் செயினை வைத்து முதல்வரிடம் அளித்துள்ளார்.

 • Share this:
  வேலைகேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக தனது 2 பவுன் செயினை அளித்த மேட்டூரைச் சேர்ந்த மாணவிக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

  மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஏராளமான மக்கள் மனுக்களை வழங்கினர். அப்போது பி.இ.பட்டதாரி மாணவி செளமியாவும் தனது மனுவை முதல்வரிடம் அளித்துள்ளார். அதில் தனது குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கி, தனது படிப்பிற்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும் என்றும், அந்த வேலையும் அரசு வேலையாக தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தனது ஊரின் அருகிலே தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தால் கூட போதும் என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், அந்த மனுவுடன் செளமியா, கொரோனா நிதிக்காக தான் அணிந்திருந்த 2 பவுன் செயினை வைத்து முதல்வரிடம் அளித்துள்ளார்.  இந்நிலையில், மாணவி செளமியா வழங்கிய மனுவை படித்துப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், ஏழ்மை நிலையிலும், கொரோனா நிவாரண நிதிக்காக செளமியா தனது 2 பவுன் செயினை அளித்ததை கண்டு முதல்வர் நெகிழ்ச்சியடைந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதைத்தொடர்ந்து, மாணவி செளமியா அளித்த மனுவை தனது முகநூல் பதிவில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.

  பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: