முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுமா? - கையெடுத்து கும்பிட்டு சென்ற அமைச்சர் கே.என்.நேரு

மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுமா? - கையெடுத்து கும்பிட்டு சென்ற அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

"காவிரியில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுமா?" என்ற செய்தியாளர் கேள்விக்கு, அமைச்சர் நேரு கையெடுத்து கும்பிட்டபடியே பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ், பாசன ஆறுகள் , வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர் வார, திருச்சி மாவட்டத்திற்கு, 18.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 232.59 கி.மீ நீளத்திற்கு மொத்தம், 90 பணிகள் நடைபெற்று வருகின்றன. 

திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் ஆறு, குடமுருட்டி ஆறு, கொடிங்கால், நந்தியாறு, பங்குனி வாய்க்கால், சோழகம்பட்டி ஏரி, ஆனந்த காவேரி, கோரையாறு , அரியாறு போன்ற ஆறுகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், 80 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.க.மணிவாசன் ஐ.ஏ.எஸ்., ஆட்சித் தலைவர் சிவராசு ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ALSO READ | நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி... வைரலாகும் போஸ்டர்கள்

அப்போது, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "காவிரி பாசன பகுதிகளில், 80 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, திருச்சியில் கடந்த மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் பகுதிகளிலும் தூர்வாரும் பணிகள் நடக்கின்றன. விவசாயிகள் எங்கெல்லாம் தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனரோ. அங்கெல்லாம் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

இந்த பணிகளை, எனது தொகுதி (திருச்சி மேற்கு) மற்றவர்கள் தொகுதி என்ற பாகுபாடு பார்க்காமல், எல்லா தொகுதிகளிலும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். "காவிரியில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுமா?" என்ற செய்தியாளர் கேள்விக்கு, அமைச்சர் நேரு கையெடுத்து கும்பிட்டபடியே பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

First published:

Tags: DMK, K.N.Nehru, Mettur Dam, Tamilnadu