ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

Mettur Dam | அணை நிரம்பியதால், அணைக்கான நீர்வரத்து முழுவதும், அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mettur, India

மேட்டூர் அணை நிரம்பியதால்,  மீண்டும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம், காலை 3:30 மணிக்கு 120 அடியை எட்டியது. இதனை அடுத்து, 12.10.22 காலை 5:30 மணி முதல், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 20,000 கன அடியிலிருந்து 28,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம்  23,000  கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக 5,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

அணை நிரம்பியதால் , அணைக்கான நீர்வரத்து முழுவதும், அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read More: இலவச லேப்டாப் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி கால்வாய் அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவேரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Published by:Srilekha A
First published:

Tags: Cauvery River, Flood alert, Mettur