• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தது..

மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தது..

மேட்டூர் அணைக்கு நீர் வரத்தை விட பாசனத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 24 நாட்களில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. முதலில் குறுவை சாகுபடியும், தொடர்ந்து சம்பா, தாளடி நெல் பயிர் சாகுபடியும் செய்யப்படுகிறது.

    அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் அணைக்கு நீர் வரத்து ஆகியவற்றை பொருத்து அணையில் தண்ணீர் திறக்கும் தேதி மாறுபடும்.

    88 ஆண்டு அணை வரலாற்றில் இதுவரை உரிய தேதியான ஜூன் 12-இல், 18 முறைகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 12-ந் தேதிக்கு முன்பு 10 முறையும், ஜூன் 12-ந் தேதிக்கு பிறகு 60 முறையும் இதுவரையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததாலும், (அணையின் நீர் மட்டம் 96.81 அடியாக இருந்ததால்) பருவ மழையை எதிர்நோக்கியும், உரிய தேதியான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 12-06-2021 அன்று காலை 10.30 மணிக்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.



    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்சமயம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த ஆண்டு அணை திறக்கப்பட்ட 12-06-2021 அன்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 60.78 டி.எ.ம்சி யாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக அன்று காலை விநாடிக்கு மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு அன்றே மாலைக்குள் படிப்படியாக 10000 கன அடியாக உயர்த்தப்பட்டது.  ஜுன் மாதம் 26-ம் தேதி வரை வழங்கப்பட்ட நிலையில் அன்று மாலை விநாடிக்கு 10000 கன அடியிலிருந்து  15000 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 40.29 டி.எம்.சி ஆக குறைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... வீடுகளில் இனி இந்தக் கருவியை பொருத்தாவிட்டால்.. மின் இணைப்பு கிடையாது!

    இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 78.31 அடியாக உள்ளது. நீர் இருப்பு 40.29 டி.எம்.சி ஆகவும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 674 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு  15000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: